கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் பிணை மனு நிராகரிப்பு!

கஞ்சா கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இளவாலையில் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த இரு நபர்களின் பிணை விண்ணப்பத்தை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் நேற்று(14) நிராகரித்துத் தீர்ப்பு வழங்கினார்.
வவுனியாவைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கடந்த- 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்-31 ஆம் திகதி இளவாலைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தனர். மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்துச் சந்தேகநபர்கள் இருவரும் தமக்குப் பிணை வழங்கக் கோரி யாழ். மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த பிணை மனுவை நேற்றைய தினம் விசாரித்த யாழ்.மேல் நீதிமன்ற மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
Related posts:
தென்மராட்சியில் அண்மைக்காலமாக கால்நடைகளின் திருட்டு அதிரிப்பு!
தொடர்ந்து இருப்பது குறித்து தீர்மானிப்பேன் : அமைச்சர் சுசில்!
உத்தியோகபூர்வ இணையத்தளம் எந்தவொரு இணையப் பரிவர்த்தனைகளுக்கும் உதவவில்லை - தபால் திணைக்களம் அறிவிப்பு...
|
|