கச்சதீவு திருவிழாவில் 10000 பேர் பங்கேற்பார்கள்!
Saturday, January 7th, 2017
கச்சதீவு திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பத்தாயிரம் பேர் பங்கேற்பார்கள் என இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கச்சதீவு திருவிழா தொடர்பில் கொழும்பு ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதி வாரத்தில் கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 10000 கத்தோலிக்க பக்தர்கள் பங்கேற்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
திருவிழாவிற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக யாழ்ப்பாண பேராயர் உத்தியோகபூர்வமாக தமிழக கத்தோலிக்க சபைக்கு திருவிழா குறித்து அறிவிப்பார். அதன் பின்னர் தமிழக கத்தோலிக்க பக்தர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்பார்கள்.
புனித அந்தோனியார் தேவாலயம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் திருவிழாவில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு திருவிழாவில் பங்கேற்கும் தமிழக கத்தோலிக்க பக்தர்கள் வீசா பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை என கடற்படைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


