ஒரு நாளில் 83 மில்லியன் ரூபா வருமானம்!
Wednesday, May 3rd, 2017
உலக தொழிலாளர்கள் தினத்தன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு 83 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் இதில் அரசியல் கட்சிகளுக்காக வழங்கப்பட்ட பஸ்களில் மாத்திரம் 58.6 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் பொதுவான பயண நடவடிக்கைகளிலும் கருத்திற் கொள்ள கூடிய வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொதுவாக அரசாங்க விடுமுறை நாட்களில் அல்லது ஞாயிறு தினங்களில் தங்கள் தினசரி வருமானம் 68 மில்லியன் ரூபாய் எனவும் இம்முறை பாரிய அதிகரிப்பு ஒன்று காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே தின பேரணிக்காக இம்முறை வழங்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை மற்றும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதற்கமைய இந்த அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Related posts:
தேங்காய் எண்ணெய் விலை குறைப்புக்கு அமைச்சரவை அனுமதி!
கணக்காய்வு சேவையில் 40% வெற்றிடங்கள் - கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவிப்பு!
பொருளாதாரதத்தை மறுசீரமைக்க சட்டமூலம் - 3 வருடங்களில் இளைஞருக்கான சிறந்த நாடு கட்டியெழுப்பப்படும் - ஜ...
|
|
|


