ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி யாழ்ப்பாணத்தில்!

Friday, March 24th, 2017

ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி ஆகியவை யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வின் முதலாவது அம்சமாக, ஏற்றுமதி உற்பத்திகள் கண்காட்சியினை முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம வடக்கு மாகாண ஆளுநர்  உள்ளிட்டோர் இணைந்து திறந்துவைத்தனர்.

பிராந்திய மட்டங்களில் 2000 புதிய ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துமுகமாக  சர்வதேச வர்த்தக மற்றும் திறமுறை அபிவிருத்தி அமைச்சினால் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது

வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 500 உள்ளூர் முதலீட்டாளர்களின் வாண்மை விருத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வும் இதற்கிணைவாக இடம்பெற்றது.

Related posts: