எல் நினோவின் தாக்கம் 50% அதிகரிக்கும் என எச்சரிக்கை!

‘எல் நினோ’ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக மழைக்காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் தீவிரமான வெயில் வாட்டி வதைக்கும்.இதனால் அளவுகடந்த வறட்சி, வறண்ட வானிலை அல்லது அதிக மழை ஏற்படும்.
இந்நிலையில், 2017 ஆம் ஆண்டில் எல் நினோவின் தாக்கம் 50% அதிகமாக இருக்கும் என அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கிழக்கு பசுபிக் பெருங்கடலில் கடந்த 15 நாட்களாக வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வருடம் எல் நினோவின் தாக்கம் 6 மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.2015 ஆம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு எல் நினோவும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
விண்வெளி ஆய்வில் சீன விண்கலம் புதிய சாதனை!
எதிர்வரும் திங்கள்முதல் அனைத்து தொழிலிடங்களும் வழமைக்கு திரும்பும் - வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் - நிதி இர...
|
|