எந்தத் தொழிலாக இருந்தாலும் எதிர்காலத்தில் சான்றிதழ் தேவை – கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் யாழ்.மாவட்ட அலுவலர் தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2016

எதிர்காலத்தில் எந்தத் தொழில் செய்வதாக இருந்தாலும் அது குறித்து பயிற்சி பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டியது அவசியம். நடப்பாண்டில் கடந்த 11 மாதங்களில் 1,153 பேருக்கு கைத்தொழில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் யாழ்.மாவட்ட அலுவலர் எஸ்.கிருஷ்ணபாலன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மோட்டார் சைக்கிள் இயந்திரம் திருத்துதல், டீசல் இயந்திரம் திருத்துதல். ஓட்டோ திருத்துதல், வாகன மின் இணைப்பு, மேசன், தச்சு வேலை போன்றவை உட்பட 63 கைத்தொழில் வேலைகளுக்கான பயிற்சிகளை வழங்கியுள்ளோம். எமது பயிற்சி 6 மாத காலப் பயிற்சியில் இருந்து 3 வருட காலப் பயிற்சிவரை உள்ளது. இதனடிப்படையில் தரம் 3 இல் இருந்து 7 வரையான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

தரம் 4 இற்கு மேல கற்கையைத் தொடர்பவர்கள் டிப்ளோமா மற்றும் உயர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய முடியும். எந்தவொரு தொழில் துறையிலும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் துப்பரவு செய்தல் தொழில் உட்பட அனைத்துத் தொழில்களிலும் எதிர்காலத்தில் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் கட்டாயமானது. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்களும் அல்லது அதற்கு கீழ் நிலையில் கல்வியை முடித்துக் கொண்டவர்களும் தமது அனுபவ ரீதியான தொழில்களையே மேற்கொண்டு வருகின்றனர். அவர்களும் தாம் செய்து வரும் தொழில்களில் இங்கு பயிற்சிகளை மேற்கொண்டு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் எந்தவொரு தொழில் செய்வதாக இருந்தாலும் அவர் கட்டாயமாக அத்துறையில் சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என்ற நிலைமை ஏற்படும் – என்றார்.

nvq_r

Related posts: