எத்தியோப்பியாவில் இலங்கையின் தூதரகம்!

Tuesday, November 29th, 2016

 

எத்தியோப்பியாவுக்கான இலங்கையின் புதிய தூதரகம் ஒன்று அந்நாட்டின் தலைநகர் அடிஸ்ஹபாபா நகரில் திறக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சுமித் தசநாயக்க, விரைவில் அந்நாட்டு ஜனாதிபதியிடம் தனது நியமனக் கடிதத்தை கையளித்து தனது பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

இலங்கைக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையிலான ராஜதந்திர தொடர்புகளை அதிகரிக்கவும் 54 நாடுகள் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க ஒன்றியத்துடனான உறவுகளுக்காகவும் இந்த தூதரகம் திறக்கப்படுகிறது.அணி சேரா நாடுகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையில், இலங்கைக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையில் 1972 ஆம் ஆண்டு ராஜதந்திர தொடர்புகள் ஆரம்பித்தன.

எனினும் இலங்கை கென்யாவின் நைரேபி நகரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாகவே எத்தியோப்பியாவுடன் தொடர்புகளை பேணி வந்தது. எத்தியோப்பியாவும் இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள தனது தூதரகத்தின் ஊடாகவே இலங்கையுடன் தொடர்புகளை பேணி வந்தது என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

01-ethiopiadam-300

Related posts: