எதிர்வீட்டாரின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலி!
Thursday, January 12th, 2017
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவமானது இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வழியிலுள்ள வீட்டில் வசிக்கும் 25 வயதான பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் எதிர்வீட்டில் வசித்து வந்தவர்கள் தாக்கியதாலேயே குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:
யாழ்ப்பாணத்தில் கொரோனா மரணங்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் மூவர் பலி!
ஆண்களுக்கு மசாஜ் கடமைகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் வகையில் சட்டம் உருவாக்கப்படும் - ஆயுர்வேத ஆணையாளர...
வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!
|
|
|


