எச்சரிக்கை – யாழிலும் பன்றிக்காச்சல்!
Wednesday, February 15th, 2017
வன்னிப் பகுதியில் பரவிக் கொண்டிருந்த பன்றிக் காச்சல் எனப்படும் எச்.1என்.1 வைரஸ் காச்சலின் தாக்கத்திற்கு உள்ளான ஒருவர் யாழ் போதானா வைத்தியசாலையிலும் இனம் காணப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னிப் பகுதியி்ல் கடந்த வாரம் நான்குபேர் எச்.1என்.1 வைரஸ் காச்சலின் தாக்கத்திற்கு இலக்கானமை தொடர்பில், சுகாதார ஆராச்சிக் கழகத்தின் அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே நேற்றைய தினம் யாழிலும் ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார்.
இந் நிலையில் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான குறித்த நபருக்கு உரிய சிகிச்சையளிக்கப்படுவதோடு சந்தேகத்தின் பேரில் அவரின் இரத்த மாதிரி மருத்துவ ஆராச்சிக் கழகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பப்பட்ட இரத்த மாதிரி அறிக்கையில் குறித்த நபரிற்கு எச்1 என்1 வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நோய்த்தாக்கம் கடந்த வாரம் வன்னியில் காணப்பட்ட போதும் யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.
இதேநேரம் கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக மருத்துவ ஆராச்சிக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் 4 பேருக்கு எச்1 என் 1 வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts:
|
|
|


