எச்சந்தர்ப்பத்திலும் வற் வரி ரத்து செய்யப்படாது – அஜித் பெரேரா!

Friday, July 8th, 2016

வற் வரி எந்த சந்தர்ப்பத்திலும் ரத்து செய்யப்படாது என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தொடக்கம் அறிமுகம் செய்யப்பட்ட வெற் வரி எந்த காரணத்திற்காகவும் ரத்து செய்யப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வற் வரி குறித்த திருத்தங்களை மேற்கொள்ள எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.வற் வரி முறைமை உலகின் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு பொருளியல் நிபுணரும் வற் வரியை ஏற்றுக் கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வற் வரியை ரத்து செய்யுமாறு கோரும் தரப்பினருக்கு வற் வரி பற்றி எவ்வித அறிவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: