உள்ளூர் வெங்காயத்திற்கு 80 முதல் 140 ரூபா கிடைப்பது திருப்திகரமாக இல்லை – பெரிய வெங்காய விவசாயிகள் குற்றச்சாட்டு!

Sunday, September 18th, 2022

ஒரு கிலோ உள்ளூர் வெங்காயத்திற்கு 80 முதல் 140 ரூபா கிடைப்பது திருப்திகரமாக இல்லை என பெரிய வெங்காய விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தம்புள்ளை, சீகிரிய, தேவஹுவ, கல்கிரியாகம, புப்போகம போன்ற பிரதேசங்களில் பயிரிடப்படும் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் அறுவடை இந்த நாட்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சந்தையில் ஒரு கிலோ உள்ளூர் வெங்காயத்தின் அதிகபட்ச மொத்த விற்பனை விலை 80 ரூபாவில் இருந்து 140 ரூபாவாக குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வருடம் பெரிய வெங்காயச் செய்கைக்காக விவசாயிகள் பெருமளவு பணம் செலவழித்த போதிலும், உரிய வருமானம் கிடைக்கவில்லை என இப்பகுதி பெரிய வெங்காய விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் குறித்த விலையில் உள்ளூர் வெங்காயம் 130 முதல் 140 ரூபாவுக்கே விற்பனையாவதாகவும் அவர்கள் தெரிவிக்கினறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: