உலக முடிவு பகுதியின் மலைத் தொடருக்கிடையில் கேபிள் கார்!
Friday, September 28th, 2018
சப்ரகமுவ மாகாணத்தில் பெலிகுல் ஓயா மற்றும் உலக முடிவு காணப்படும் மலைத் தொடர் பகுதிகளுக்கு இடையில் கேபிள் கார் சேவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் நிதியுதவியின் கீழ் இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
பெலிகுல் ஓயா மற்றும் உலக முடிவு பகுதிகள் சுற்றுலா பயணிகளை அதிக கவர்ந்த இடமாகும். இந்நிலையில் இப்பகுதியில் கேபிள் கார் சேவை அமைக்க டுபாய் அரசுடன் பேச்சு நடத்தியுள்ளோம்.
இந்த திட்டத்துக்கான ஆலோசனைகளை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புத்திஜீவிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளோம்.
இதன் மூலம் இந்தப் பகுதியில் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மண்டைக்கல்லாறு பாலத்தினூடான போக்குவரத்து தடைப்படும் அபாயம்!
இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கை - பேருந்துகளில் பயணப்பொதிகளை எடுத்துச் செல்வது தடை !
விஞ்ஞான பாடத்தில் இடம்பெற்ற தவறு - மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகளை வழங்கும் முறைமை த...
|
|
|


