உலகின் வயது முதிர்ந்த சாவு!

Thursday, May 4th, 2017

உலகின் இதுவரை வாழ்ந்தவர்களில் மிக வயதான மனிதராக கருதப்பட்ட இந்தோனேஷியாவைச் சேர்ந்த 146 வயது சோடிமெட்ஜோ மரணமடைந்தார்.

1890 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர் என்று ஆவணங்களின் ஊடாகத் தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவில் 1900-ம் ஆண்டில்தான் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு நடைமுறை தொடங்கப்பட்டதால் அதற்கு முந்தைய ஆவணங்களில் தவறுகளும் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் அவரது உடல்நிலை மீளவும் மோசமடைந்தது என்று அவரது பேரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 4 மனைவிகளைக் கொண்ட சோடிமெட்ஜோ கடுமையாக புகைப்பிடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: