உலகச் சந்தையை இலக்குவைத்து மீண்டும் எரிபொருள் விலைச் சூத்திரம்!

பன்னாட்டுச் சந்தையில் ஏற்படும் எரிபொருள் விலை மாற்றத்துக்கமைய இலங்கையிலும் எரிபொருள்களின் விலையைப் பேணுவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை நிதியமைச்சு விரைவில் அமைச்சரவையில் சமரப்பிக்கவுள்ளது.
கடந்த வியாழனன்று எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் சில மணி நேரத்திலேயே அதிகரிப்பு மீளப் பெறப்பட்டது. இப்படியான நிலைமையைத் தவிர்க்கும் நோக்கிலேயே மேற்படி அமைச்சரவைப் பத்திரம் அமையுமென்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகச் சந்தையில் எண்ணெய் விலை மாற்றமடையும்போது உடனுக்குடன் இலங்கை விலையையும் மாற்றுவதன் மூலம் இழப்பு ஏற்படுவதைத் தவிரக்க முடியும் எனக் கருதப்படுகின்றது. அத்துடன் எரிபொருள் சூத்திரத்தை வாராந்தம் மாற்றியமைப்பது தொடர்பில் நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
Related posts:
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வதுருடம் வெளிநோயாளர் பிரிவில் மட்டும் 3 இலட்சம் பேருக்கு சிகிச்சை ...
வெளிவிவகார அமைச்சர் சுவீடன் பயணம்!
ஜனவரி மாதம்முதல் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவ...
|
|