உரிமை கோரப்படாத நிலையில் யாழ். பொலிஸாரால் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள சான்றுப் பொருட்கள்

Wednesday, May 18th, 2016

யாழ். பொலிஸாரால் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள சான்றுப் பொருட்கள் சில உரிமை கோரப்படாத நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழவு இயந்திரம் , மோட்டார்ச் சைக்கிள், பதிவு செய்யப்படாத உழவு இயந்திரப் பெட்டிகள் ஆகியனவே இவ்வாறு உரிமை கோரப்படாத நிலையிலுள்ளன.

எனவே, குறிப்பிட்ட சான்றுப் பொருட்களை உரிமை கோருபவர்கள் எவரேனுமிருப்பின் எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் அலுவலக நேரத்தில் உரிய ஆவணங்களுடன் சமூகமளித்து உரிய பொருட்களை அடையாள படுத்துமாறு நீதிமன்றப் பதிவாளர் கேட்டுள்ளார்.

Related posts: