உமி மூட்டைகளுக்குள் முதிரைகுற்றிகளைக் கடத்தியவர்கள் கைது!
Thursday, March 31st, 2016
பார ஊர்தியில் உமி மூடைகளுக்குள் முதிரை மரக்குற்றிகளை மறைத்துக் கொண்டு சென்ற இருவரை, உடுவில் பகுதியில் வைத்து நேற்று (30) கைதுசெய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சிப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இந்த பார ஊர்தியை வீதிக்கடமையில் ஈடுபட்ட பொலிஸார் மறித்துச் சோதனை செய்தனர்.
இதன்போது, தாங்கள் நெல் மூடைகளைக் கொண்டு செல்வதாக லொறியில் பயணித்த இருவரும் கூறியுள்ளனர்.
மூடைகளை பொலிஸார் குற்றிப் பார்த்த போது அதற்குள் உமி மாத்திரமே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் கொண்ட பொலிஸார், மூடைகளை அகற்றிப் பார்த்த போது, உள்ளே முதிரை மரக்குற்றிகள் இருந்தமை தெரியவந்தது.
இருவரையும் கைதுசெய்த பொலிஸார், கடத்தப்பட்ட 38 முதிரை மரக்குற்றிகளையும் பறிமுதல் செய்தனர். அவை சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையவை எனப் பொலிஸார் கூறினர்.
Related posts:
தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கும்!
அந்நியச் செலாவணிக்கு நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவிப்பு!
ரணில் எனது சிறந்த நண்பர் - தேசிய அரசாங்கம் அமைப்பதற்கும் எண்ணமில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி...
|
|
|


