உடைந்து விபத்துக்குள்ளான பாலத்தை புதுப்பிக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்பு!
 Saturday, March 5th, 2022
        
                    Saturday, March 5th, 2022
            
மாத்தறையில் கடற்கரை பூங்காவை அண்மித்துள்ள பாலம் உடைந்து விபத்துக்குள்ளானமையை தொடர்ந்து புதிய பாலமொன்றை அமைக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பணிப்புரை விடுத்துள்ளார்.
மாத்தறையில் அமைந்துள்ள பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பாலம் நேற்று உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
நூற்றுக்கணக்கான மக்கள் விகாரையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த பாலம் உடைந்து விழுந்தது. எனினும் சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
கடலின் குறுக்கே விகாரைக்கு செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்த பாலத்தை 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய பாலத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் இன்று நேரில் வருகை விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழை இழந்த பின்னர் தமிழர்கள் அடையும் அரசியல் தீர்வு பயனற்றது - நாவலர் விழாவில் இரா.செல்வவடிவேல்!
புதுப்பிக்கத்தக்க சக்திக்கு இடமளிக்கும் திட்டங்களுக்கு மின்சார சபை அனுமதிக்கிறது - அமைச்சர் காஞ்சன வ...
13 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு 5 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறை !
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        