உடுவில் பிரதேசத்தில்  டெங்கு கட்டுப்பாட்டு கூட்டம்!

Tuesday, January 9th, 2018

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரிகள் டெங்கு நோய்த் தாக்கத்தின் அளவு அதிகரித்து இருப்பதையடுத்து டெங்கு நோய்க் கட்டுப்படுத்தலுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் மதுமதி வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் யாழ். மாவட்ட பிராந்திய தொற்று நோய் வைத்திய அதிகாரி ஜி.ரஜீவ், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி த.திரிபுவனசுந்தரி, உடுவில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் யா.நக்கீரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இக் கூட்டத்தில் கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

கடந்த வருடம் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்த பிரதேசங்களுக்;கு மாறாக டெங்கு   பரம்பலின் தாக்கம் மாறுபட்ட பிரதேசங்களில் அதிகரித்து காணப்படுவதாலும் இப் பரம்பலினை அவசரமாக கட்டுப்படுத்துவது தொடர்பிலும் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் டெங்கு பதிவு அட்டைகள் தொடர்பாகவும் கிராமிய டெங்கு கட்டுப்பாட்டு குழுக்களை செயற்படவைத்து இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடல் அமைந்து இருந்தது.

Related posts: