இலங்கை விமான நிலையத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

Thursday, December 21st, 2017

இலங்கையின் இரத்மலானை விமான நிலையத்தில் சிவில் விமான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக விமானநிலையத்தின் ஓடுபாதைக்கு தெற்காகவுள்ள 25 ஏக்கர் அளவிலான நிலப்பகுதியை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் 1938 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட முதலாவது விமான நிலையம் இதுவாகும். 1961 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமானநிலையம் திறக்கப்படும் வரை தேசிய மற்றும் உள்ளூர் விமான சேவைகளுக்காக இது பயன்படுத்தப்பட்டது. 1860 மீற்றர் நீளமும் 45 மீற்றர்அகலமும் உடைய விமான ஓடுபாதை இங்கு உண்டு. இது 460 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

கொழும்புக்கு அருகிலுள்ள இந்த விமானநிலையத்தை சிவில் விமான நடவடிக்கைகளுக்காக விரிவுபடுத்துவதன் மூலம் பெரும் நன்மையைபெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலப்பரப்பில் அமைந்துள்ள இலங்கை விமானப்படையின் முகாமின் பகுதியொன்றை அவர்களின் இணக்கத்துடன் விமானநிலையத்தின் வட பகுதியில் புனரமைப்பு மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: