இலங்கை தேயிலைக்கு உலக சந்தையில் அதிக கிராக்கி!

Friday, December 9th, 2016

இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலைக்கு உலக சந்தையில் இந்த நாட்களில் அதிக கேள்வி காணப்படுவதாக இலங்கை தேயிலைச் சபை கூறியுள்ளது.

அதன்படி காணப்படுகின்ற கேள்விக்கமைய உலக சந்தையில் தேயிலைக்கான விலை அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு கிலோகிராம் தேயிலை 470 ரூபாவாக இருந்ததுடன், கேள்வி அதிகரித்துள்ளமையையடுத்து ஒரு கிலோகிராம் தேயிலை 600 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் மத்திய மலைநாட்டில் நிலவுகின்ற காலநிலைய காரணமாக தேயிலையின் தரம் அதிகரித்துள்ளமை தேயிலை விலை அதிகரிப்பிற்கான காரணம் என்று இலங்கை தேயிலைச் சபை கூறியுள்ளது. எவ்வாறாயினும் தேயிலை தொழில்துறையில் காணப்படுகின்ற ஊழியர் பற்றாக்குறை காரணமாக கேள்விக்கேற்றவாறு தேயிலையை வழங்குவதற்கு தேயிலை நிறுவனங்களுக்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேயிலைச் சபை கூறியுள்ளது.

1690581855tea

Related posts: