இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு சீனா பங்களிப்பு!

தெற்காசியாவின் பொருளாதார கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவதற்கு, தமது முழுமையான உதவியை சீனா வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் சீனாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் தலைமையிலான தூதுக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளக்கூடிய வாய்ப்பு ஆசிய நாடுகளுக்கே இருப்பதாக பிரதமர் தலைமையிலான தூதுக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்தியா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உற்பட்ட ஆசிய நாடுகள் உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கக்கூடிய சக்திகளாக மாறியுள்ளது. இதன் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தூதுக்குழு குறிப்பிட்டது.
இலங்கையை தெற்காசியாவின் நிதி, பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
டெங்கு தொற்று தொடர்பில் மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை!
பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் த...
உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்க...
|
|