இலங்கையில் பிரான்ஸ் அபிவிருத்தி அலுவலகம் !
Thursday, May 4th, 2017
இலங்கையில் பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான இராஜதந்திர வசதிகளை செய்துகொடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.பிரான்ஸ் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்காக அன்பளிப்பு கொள்கையினை செயற்படுத்தும் இந்த நிறுவனம் உலகம் முழுவதும் 60 நாடுகளுக்கு தனது சேவையை வழங்கி வருகின்றது.
இந்த நிறுவனம் 2005ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கைக்கும் பிரான்ஸ்க்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிறுவனம் இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Related posts:
யாழ். அச்சுவேலியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
இந்தியாவிடமிருந்து பெறப்படும் கடனில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் - அமைச்சர்...
நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்களில் திருத்தம் – ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு...
|
|
|


