இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – முறையான திட்டம் தேவை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வலியுறுத்து!

Sunday, February 21st, 2021

இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றினால் ஏற்படும் இறப்புகளைக் கட்டுப்படுத்த முறையான திட்டம் தேவை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரிதா அலுத்ஜே தெரிவித்தார் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பெப்ரவரியில் இறப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. அனைத்து இறப்புகளிலும் எழுபது சதவீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக தடுப்பூசி திட்டத்தில் இது தொடர்பில் கவனம் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜனவரி மாதம் முழுவதும் சுமார் 112 இறப்புகளைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெப்ரவரி மாதத்தில் இந்த 20 நாட்களில், ஜனவரி மாதத்தை விட அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே கோவிட் வைரஸ் தொற்றினால் ஏற்படும் இறப்புகளைக் கட்டுப்படுத்த முறையான திட்டம் தேவை என்று ஹரிதா அலுத்ஜே தெரிவித்தார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: