இலங்கையின் புதிய கண்டுபிடிப்பு!

நுவரெலியாவில் அதிக தேவையுடையதான விசேட பழம் ஒன்று காய்த்துள்ளது. பெப்பினோ என்ற மருத்துவ குணமுடைய பழமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது.
நுவரெலியா, ஹாவாலெிய பிரதேசத்தில் வசிக்கும் ஹெட்டிஆராச்சி, ஜயந்த பெரேரா ஆகிய இரண்டு இளைஞர்களினால்இணையத்தளத்தின் ஊடாக மேற்கொண்ட சோதனையின் பின்னர் இந்தப் பழம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மிளகாய் இலைக்கு சமமானஇலையின் செடியிலேயே இந்த பழம் காய்த்துள்ளது. ஒரு செடியில் 3 அல்லது 4 காய்கள் காய்ப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிலவேளைகளில் தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பில் ஆராய்ந்த போது,நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்தாகவும் காணப்படுகின்றது. இந்த பழத்தை உண்ணும் போது நீர்த் தன்மைமற்றும் புளிப்பு தன்மை காணப்படும். இருப்பினும் பழம் பழுத்தவுடன் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதோடு, தேன் போன்ற சுவைகாணப்படும்.
பல மருத்துவ நன்மை கொண்ட இந்தப் பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பினால்அறிவிக்கப்பட்டுள்ளது. நீரழிவு நோய், இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்றநோய்களுக்கு சிறந்த மருந்தாக காணப்படுகின்றது.
பல்வேறு மருத்துவ தேவைக்கு பயன்படுத்தும் இந்த பழம் இலங்கையில் கிடைப்பது சாதாரண விடயமல்ல. இதனை பெற்றுக்கொள்ள பலநாடுகள் முயற்சித்து வருவதாக தெரிய வருகிறது
Related posts:
|
|