இலங்கையின் தென்கடலில் திடீர் மாற்றம் – ஆபத்தின் அறிகுறியா?

காலி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நேற்று அடைமழை பெய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் போது கடலில் சூறாவளி தன்மை ஒன்று ஏற்பட்டுள்ளதாக காலி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். காலி கோட்டை பிரதேசத்தின் கடல் பகுதியில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அது 5 நிமிடங்கள் வரை நீடித்ததாக கூறப்படுகின்றது.
பாரியளவிலான நீர் மலை போன்ற ஒன்று வானத்தை நோக்கி சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.காலி, காடே வெல்ல மற்றும் ரத்கம வெல்ல பிரதேச மீனவர்கள் இதனை அவதானித்துள்ளனர்.இது சூறாவளி அச்சுறுத்தல் என கருதிய மீனவர்கள், தமது நடவடிக்கைகளை நிறுத்தி, கரைக்கு திரும்பியதாக தெரிய வருகிறது
Related posts:
2022 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிமம் வெளியானது
சினோபோர்ம் தடுப்பூசிக்காக செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் - இராஜாங...
இந்தியா நிதி உதவி – புனரமைப்பு பணிக்காக அனுராதபுரம் - வவுனியா புகையிரத சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்...
|
|