இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை !

Friday, December 9th, 2016

இலங்கை-இந்தியா இடையிலான பயணிகள் பயணப்படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்க  தயாரென MMBL-Pathfinder Group  குழுமம் பயணப்படகு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணப்படகு சேவையில் முன் நிலை வகிக்கும் MMBL-Pathfinder Group  குழுமம இத்துறையில் முன் நிலை வகிக்கும்  Aitken Spence and Norled நிறுவனங்களுடன் இணைந்து  முதலீட்டு கூட்டு தொழில் முயற்சியாக இதனை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தச் சேவை மூன்று நாடுகளின் முதலீட்டு ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்படும். இது தொடர்பான முன்சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டத்தின் கீழ் கொழும்பு, தூதுக்குடி நகரங்களுக்கு இடையில் பயணப்படகு சேவை மற்றும் சரக்குக் கப்பல் சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் பேர்னாட் குணதிலக தெரிவித்தார்.

இரண்டாவது கட்டத்தின் கீழ் தலைமன்னார் மற்றும் இராமேஷ்வரத்திற்கிடையிலான கப்பல் சேவையை மீள முன்னெடுப்பதற்கான திட்டத்தில் கவனம் செலுத்தப்படும். கொழும்பு – திருச்சி கப்பல் சேவையை கொச்சி கேரலா போன்ற முன்ணனி துறைமுக நகரங்களுக்கான சேவை கேள்வியின் அடைப்படையில் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் பயணப்படகு சேவையில 1914ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது பயங்கரவாத செயல்கள் காரணமாக 1980களில் முடக்கப்பட்டது.

இந்தச் சேவைகளை மீளவும் ஆரம்பிப்பதன் மூலம் இருநாடுகளைச் சேர்ந்த மக்களும் பயனடைவார்கள் என திரு.குணதிலக கூறினார். கடந்த ஆண்டு மூன்று இலட்சத்திற்கு மேலான இந்தியர்கள் இலங்கை வந்ததாகவும் இரண்டு இலட்சத்திற்கு மேலான இலங்கையர்கள் இந்தியா சென்றதாகவும் தெரிகிறது.

Passengers carry their belongings after disembarking from vessel Scotia Prince which made the maiden voyage from India to Sri Lanka in Colombo, Sri Lanka, Tuesday, June 14, 2011. The ferry service between India and Sri Lanka that was suspended during the Sri Lankan civil war was resumed Monday night after nearly three decades. (AP Photo/Eranga Jayawardena)

Related posts: