இரு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டாலும் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றுவது அவசியம் – பொதுமக்களிடம் சமுதாய மருத்துவ விசேட நிபுணர் வலியுறுத்து!
Thursday, September 23rd, 2021
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றாதோருக்கு மீண்டும் தொற்று உறுதியாவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக சமுதாய மருத்துவ விசேட நிபுணர் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தமது ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாத இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டோரில் 65 முதல் 70 சதவீதமானோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாவதாக புதிய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தடுப்பூசி செலுத்துவதால் மரணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியுமே தவிர, தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
எனவே, தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டாலும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு பேராசிரியர் சுனெத் அகம்பொடி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சொத்துப்பிரச்சனையே வண்ணார்பண்ணையில் நிகழ்ந்த குழந்தையின் கொலைக்கு காரணம்!
யாழ்ப்பாணத்து மக்கள் முட்டாள்கள் அல்லர்: ஆர்னோல்டுக்கு சுட்டிக்காட்டுகிறார் ஈ.பி.டி.பியின் மாநகர உறு...
இலங்கை - காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தமிழ் நாட்டில் ஆராய்வு!
|
|
|


