இரண்டு மாதங்களில் தேங்காய் விலை குறையும்!
Monday, February 6th, 2017
நாட்டில் தற்போது அதிகரித்தள்ள தேங்காயின் விலை அடுத்து வரும் இரண்டு மாதங்களில குறையும் என்று தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கபில் யஹாந்தாவல தெரிவித்துள்ளார்
கடந்த சில வாரங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தேய்காயின் விலை அதிகரித்தது.
இறக்குமதி செய்யப்படும் பாம்ஒயில் மீது விதிக்கப்பட்டுள்ள வரித்தொகையை குறைப்பதற்கு அமைச்சர் நவீன் திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் ஊடாக விலையை கட்டுப்படுத்த முடியும் என்று திரு. யஹாந்தவல நம்பிக்கை வெளியிட்டார்.
நாட்டின் தெங்கு உற்பத்தியில் 40 வீதமான உற்பத்தி வீண் விரயம் செய்யப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts:
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் - இராணுவத்தளபதி சந்திப்பு!
ஊரடங்குச் சட்டம்: மீறிய 12,223 பேர் கைது – பொலிஸார் தெரிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா தொற்று வலயமாக அறிவிக்க நேரிடும் - பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை!
|
|
|


