இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒரே உறுப்பினர் கீதா குமாரசிங்க?

Saturday, July 1st, 2017

 

இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மட்டுமேயாகும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளதாக இதுவைரயில் தெரியவரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து குடியுரிமையையும் பெற்றுக் கொண்டுள்ளார் என குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலான விசாரணைகள் தெடார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறித்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.19ஆம் திருத்தச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் நபர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: