இம்மாத இறுதியில் வற் வரி அதிகரிப்பு நிறைவேற்றப்படும் – அமைச்சர் ராஜித!
Thursday, July 21st, 2016
உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைக்கமைய விரைவில் வற்வரி அதிகரிப்பை அரசாங்கம் அமுல்படுத்தும் எனவும் அரசாங்கமும் நீதித் துறைக்கு கட்டுப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கத்திடம் போதுமான நிதி உள்ளது. ஆனால் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கே நிதி போதாமல் இருக்கின்றது.
இதேவேளை வெகுவிரைவில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைக்கமைய வற்வரி அதிகரிப்பை அரசாங்கம் அமுல்படுத்தும். எமது அரசாங்கம் நீதி துறைக்கு கட்டுப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
|
|
|


