இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாரம் இலங்கை வருகை – மீனவர் பிரச்சினைகள் ஆராயப்படுமென அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Sunday, June 16th, 2024
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இம் மாதம் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான ஆராயப்படுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இந்தியாவின் மீண்டும் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன், தமிழ் கட்சிகள் மற்றும் மலையகத் தமிழ்க் கட்சிகளுடனும் அவர் கலந்துரையாடல் நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அவர் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


