இந்திய மீனவரது மரணம் தொடர்பில் கடற்படை மறுப்பு!

Tuesday, March 7th, 2017

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவலை கடற்படை பேச்சாளர் லுத்தினன் கொமான்டர் சமிந்த வலகுலுகே இன்று மறுத்துள்ளார்.

ராமமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியிலிருந்து வந்த 22 வயதான பிரிட்கோ எனப்படும் மீனவர் நேற்றிரவு 8.30 அளவில் கச்சதீவுக்கு சற்று தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தருணத்தில் மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய மீனவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் குளஞ்சிநாதன் இந்திய ஊடகங்களுக்கு செவ்வியளித்துள்ளார்.

சுடப்பட்ட மீனவர் பிரிட்கோவுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் ஸ்லத்திலேயே உயிரிழந்தாக அவர் தெரிவித்திருந்ததார். இதேவேளை பிறிதொரு மீனவரான சரவணம் (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலில் காயமடைந்துள்ளதாக உதவிப் பணிப்பாளர் தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில மீனவர்கள் காயங்கள் எதுவும் இன்றி அதிகாலை 12.30 அளவில் ராமேஸ்வரம் சென்றடைந்ததாக மீனவ சங்கத் தலைவர் நேற்றைய தினம் சுமார் 2000 ஆயிரம் மீனவர்கள் வரை குறித்த கடற்பிராந்தியத்தில் மீனபிடியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டாலும் எச்சரிக்கை மாத்திரமே விடுக்கப்படும் எனவும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படாது எனவும் கடற்படைப் பேச்சாளர் சமிந்த வலகுலுகே அத தெரணவுக்கு தெரிவித்தார்.

Related posts:

நாடாளுமன்றம் பொது இடம் அல்ல - கொரோனா சட்டம் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது - சுகாதார அமைச்சர் தெரிவி...
தொடரும் சீரற்ற வாநிலை - யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவதை தாமதிக்குமாறு பணிப்பாளர் அறிவ...
தொடரும் வரட்சியான காலநிலை - நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்...