இந்திய கடன் உதவியின் கீழ் மதவழிபாட்டு தளங்களுக்கு சூரிய சக்தியிலான மின் உற்பத்தி படலங்கள் – நிலக்கரி கொள்வனவுக்காக விலை மனுக் தொடர்பிலும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Thursday, September 29th, 2022

குறுகிய கால தேவையின் அடிப்படையில் நிலக்கரி கொள்வனவுக்காக, சர்வதேச போட்டி ஏல முறைக்கு ஏற்றவாறு, விலை மனுக் கோரப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தமது ட்விட்டர் கணக்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நிலக்கரி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத குறைந்த பட்சம் 180 நாட்களுக்கு கடன் வசதியுடன் நிலக்கரியை விநியோகிக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் இதில் பங்கேற்க முடியும்.

அதேநேரம், நிலக்கரி கொள்வனவுக்கான நீண்ட நாள் விலை மனுகோரல் எதிர்வரும் வாரத்தில் விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே

மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்துவது தொடர்பில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மதவழிபாட்டு தளங்களில் சூரிய மின் உற்பத்தி படலங்களை பொருத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கல்வி இராஜாங்க அமைச்சர், மற்றும் மேலும் சில அமைச்சுக்களை பிரதிநிதித்துவ படுத்தும் உயர்நிலை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இந்திய கடன் உதவியின் கீழ் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: