ஆய்வாளர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன!

Thursday, March 16th, 2017

வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் பண்பாட்டுப் பெருவிழா-2017 இல் “கிராமியப் பண்பாடும் மேம்பாடும்” எனும் ஆய்வுப் பொருளில் இடம்பெறவுள்ள வடமாகாண ஆய்வரங்கிற்கு ஆய்வாளர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன.

கல்வி, மருத்துவம், குடும்பம், சமயம்(வழிபாடு), விளையாட்டுக்கள், உணவு ,உடை, உறையுள், கலைகள், பொருளாதாரம், மொழி, இலக்கியம் எனும் விடயத் தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் தாயாரிக்க முடியும். ஆய்வுச் சுருக்கத்தை 300 சொற்களுக்குள் உள்ளடக்கி “உதவிப் பணிப்பாளர்”, ‘பண்பாட்டலுவல்கள் திணைக்களம்’, செம்மணி வீதி, நல்லூர் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும். ஆய்வுச் சுருக்கம் ஏப்ரல் மாதம்-28 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு 0212054105 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts: