ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு!
Wednesday, December 21st, 2016
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நெல்லுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என சங்கத்தின் ஏற்பாட்டாளர் நிஷாந்த பண்டார அத்தநாயக்க கூறினார்.
இருப்பினும், பாரியளவில் அரிசி விற்பனையில் ஈடுபட்டுள்ள சில வர்த்தகர்கள் அதிகளவிலான நெல்லை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், திட்டமிட்ட வகையில் நெல்லுக்கான தட்டுப்பாடு நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை சிறிய மற்றும் மத்திய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. போதியளவு நெல் கிடைக்காமையால் ஆலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு இவ்வாரம் இறுதி தீர்மானம்!
உழைப்பாளர் தினம் நாளை – நாடுமுழுவதும் விசேட பாதுகாப்பு - 3,500 காவல்துறையினர் கடமையில் என காவல்துறை ...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்யவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி ...
|
|
|


