ஆசிரியர் அடித்ததால் மாணவனின் காதுப்பகுதி பாதிப்பு!
Friday, November 25th, 2016
வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப்பிரிவு மாணவன் காது பாதிப்படைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். ஆசிரியர் தாக்கியதாலேயே காது பாதிக்கப்பட்டது என்று மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார். தரம் 2இல் கல்விகற்கும் யோ.விஷால் என்னும் மாணவனே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் குறித்து மாணவனின் தந்தை தெரிவித்துள்ளதாவது:
நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. காலை 9மணியளவில் குறித்த ஆசிரியர் மகனைத் தாக்கியுள்ளார். மகனின் காதுப் பகுதியில் இருந்த குருதி வெளியேறியது. ஆசிரியர் அது குறித்து எனக்கு எதுவும் கூறவில்லை. மருத்துவமனையில் சேர்க்கவும் இல்லை. மதியம் 12மணியளவில் பாடசாலையில் இருந்து மகனை அழைத்துவரச் சென்றேன். அப்பொத மகனின் காதுப் பகுதியில் குருதி வழிந்திருப்பதை அவதானித்து வைத்தியசாலையில் சேர்த்தேன். குறித்த ஆசிரியர் எனக்குத் தொலைபேசி அழைப்பெடுத்து மகனுக்கு அடித்துவிட்டேன். தயவு செய்து பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டாம் என்று கூறினார். – என்றார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
|
|
|


