ஆசியநாடுகளில் மதுபாவனையில் இலங்கைக்கு 11 ஆவது இடம்!           

Sunday, December 24th, 2017

   

ஆசியநாடுகளில் மதுபாவனையில் இலங்கை பதினோராவது இடத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசியநாடுகளில் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி தென்கொரியா மதுபாவனையில் முதலிடத்தில் உள்ளதாக அறியப்படுகிறது. தென்கொரியாவில் சராசரியாக 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10.9 லீற்றர் மதுவை பருகுவதாகக் கூறப்படுகிறது. தென்கொரியாவில் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் சோஜீ என்னும் மதுபானம் பிரபல்யம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 8.7 லீற்றர் மது உட்கொண்டு வியட்நாம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தாய்லாந்து, மங்கோலியா, சீனா முறையே மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடத்தை வகிக்கின்றன. இந்தியா ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 4.6 லீற்றர் மதுவையும் இலங்கை 4.5 லீற்றர் மதுவையும் உட்கொண்டு முறையே பத்தாம் பதினோராம் இடங்களில் உள்ளன.

Related posts: