அறுபது வகையான மருந்துகளின் புதிய விலைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியானது!
Wednesday, March 16th, 2022
அறுபது வகையான மருந்துகளுக்கான விலையில் திருத்தம் மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றுமுதல் (15) நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டுச் சபை கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி, 2019 ஆம் ஆண்டு அறுபது வகையான மருந்துகள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளிலே குறிப்பிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த மாதம் முதல் இணைந்த நேர அட்டவணை! மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை!
வலி.தென்மேற்கில் பரவுகின்றது டெங்கு – தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
நெருக்கடிகள் அனைத்தையும் சமாளிக்க உறுதியாக இருக்கிறோம் - அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|


