அரிசித் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண்பதற்கு களஞ்சியங்களில் உள்ள நெல்லை வழங்கத்தீர்மானம் – ஒரு கிலோ அரிசியை 60ரூபாவுக்கே விற்பதற்கும் ஏற்பாடு!

Saturday, December 17th, 2016

சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டிற்கு தீர்வு வழங்கும் வகையில், அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளில் உள்ள ஒன்றரை இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கமநல சேவை சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசசாங்கத்தின் கையிருப்பிலுள்ள 2லட்சம் மெட்ரிக்தொன் நெல்லில் 75 வீதத்தை அரிசி உற்பத்திக்காக விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது பற்றி அகில இலங்கை கமநல சேவை சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் தெரிவித்ததாவது:

28 அல்லது 34 ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையில் கொள்வனவு செய்த நெல்லையே அரிசியாக மாற்றி விற்கவுள்ளனர். இதனை 60ரூபாவிற்கு வழங்க முடியும் எனினும், 90 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர். இந்த பின்புலத்தின் பிரதான 3 அரிசி ஆலை உரிமையாளர்களிடம் 10லட்சம் மெட்ரிக் தொன் நெல் கையிலிருப்பில் உள்ளது எனினும் அரசாங்கத்திடம் 2லட்சம் நெல்லே உள்ளது. இதன்மூலம் சர்வதிகார நிலைமை உருவாகியுள்ளது. தம்புத்தேகம பிரதேச களஞ்சிய சாலையில் உள்ள நெல்லை, நாட்டின் பிரபல ஆலை உரிமையாளர் ஒருவருக்கு வழங்கியுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன்மூலம் அமைச்சர்களுக்கும் தரகுப்பணம் கிடைக்கிறது எனவே இது தொடர்பில் எமக்கு பாரிய சந்தேகம் நிலவுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

BasmathiRice1470743648

Related posts: