அராலியில் மாணவனின் சடலம் மீட்பு
Wednesday, May 25th, 2016
அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை (24) மாலை, 16 வயது மாணவனில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இம்முறை கல்வி பொதுத் தராதர சாதரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த, அராலி தெற்கைச் சேர்ந்த ஜெ.ஜெசிந்தன் என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம்மாணவன், கடந்த 23 ஆம் திகதி வீட்டைவிட்டுச் சென்றிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பாரத பிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ!
திணைக்களங்களில் பணியாற்றும் 1000 பணியாளர்களுக்கு எரிவாயு விநியோகம் – நடைமுறையை மீறி லிட்ரோ எரிவாயு...
இருதரப்பு உறவுகளை அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்துவதற்கும் சவுதி இளவரசருக்கு ஜனாதிபதி ரணில் கடிதம்!
|
|
|


