அரசு-தனியார் இணைந்து ஆரம்பித்த முதல் ஆடைத் தொழிற்சாலை திறப்பு!

இலங்கையில் அரசும் தனியார் துறையும் இணைந்து ஆரம்பித்துள்ள முதலாவது ஆடைத் தொழிற்சாலை கிழக்கு மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் இப்படியானத் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதாக மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலையில் தற்போது 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் புதிய ஆடைத் தொழிற்சாலைகள் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்-முஸ்லிம் பெண்களின் வாழ்வாதாரம் ஓரளவுக்கு உயரும் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சட்டவிரோதமாக இந்தியா சென்ற இலங்கையர் கைது!
இரசாயன உரத்திற்கு விலை சூத்திரம் - உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக...
2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு!
|
|