அரசியல் பழிவாங்கல்கள் குறித்த பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு விஷேட குழு நியமனம்!
Sunday, January 31st, 2021
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு மூவர் அடங்கிய விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு தொடர்பான விபரம் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான தம்மிக்க பிரியந்த சமரகோன் ஜயவர்தன, ஹேமா குமுதினி மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரத்னபிரிய குருசிங்க ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று முதல் நாடு முழுவதும் 2 மணி நேர மின் வெட்டு அமுல் - மின்சார சபை!
அத்திரலிய ரத்தின தேரரின் கடும் அழுத்தம் காரணமாக பதவி விலகிய ஆளுநர்கள்!
நாட்டின் பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு!
|
|
|


