அம்பாந்தோட்டையில் குண்டுத் தாக்கதல்!
Saturday, July 22nd, 2017
அம்பாந்தோட்டை, அங்குனுகொல்ல பகுதியில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல் காரணமாக 17 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போதே இந்த கைக்கண்டுத்தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த 14 பேர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையிலும், 3 பேர் தங்காலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய நோனாகம வீதியின் வெட்டிய சந்தி பிரதேசத்தில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
மோதல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த இடத்தை சுற்றி அருகில் இருந்த வீடுகளின் நபர்கள் ஒன்று கூடியிருந்த போது இந்த கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் அங்குனுகொல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
முகமாலை உபதபாலகம் இதுவரை இயங்கவில்லை!
வாகன இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை சேமிக்க முடிந்துள்ளது ...
வடமாகாண கைத்தொழிற்றுறை திணைக்களத்தினால் கொள்கை திட்டத்தை வகுப்பதற்கான செயற்றிட்டம்!
|
|
|


