அமெரிக்க ஆய்வுக் கப்பலை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க முடியாது – கோரிக்கையை நிராகரித்தது இலங்கை அரசு!
Saturday, April 27th, 2024
அமெரிக்க ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கான கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் எடுத்த கொள்கைத் தீர்மானத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் செல்லும் இந்த ஆய்வுக் கப்பல், எரிபொருள், நீர் சுத்திகரிப்பு, உணவு போன்ற வசதிகளைப் பெறுவதற்காக இலங்கைக் கடற்கரைக்குள் நுழைவதற்கு அனுமதி கோரியுள்ளது.
இந்த கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச கடற்பரப்புக்கு கப்பலை அனுப்பி தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முன்பதாக இலங்கை கடற்பரப்பிரல் சீன கப்பல்கள் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கடுமையாக எழுந்தன.
இதையடுத்து மற்றொரு சீன ஆய்வு கப்பலான Xiang Yang Hong 3 கடந்த நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தரவிருந்த நிலையில் அதன் வருகைக்கான கோரிக்கை நிராகரிக்கபட்டது.
இந்நிலையில் அமெரிக்க ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கான கோரிக்கையையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது
இதேவேளை வெளிநாடுகளின் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்க இலங்கை அரசாங்கம் ஒருவருடத்திற்கு அனுமதியை வழங்காதிருக்கவும் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


