அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சுவாமிநாதன்

Monday, June 12th, 2017

அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை சிறுவர்களின் முன்னேற்றத்திற்கு கைக் கொடுக்கும் வகையில் ஒத்துழைப்பை வழங்கி தேசிய இலங்கை வெற்றிபெற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இந்த சமய அலுவல்கள் அமைச்சர் டி எம் சுவாமிநாதன் இதனை தெரிவித்தார்

இதேவேளை, இந்து சமய அறநெறி கல்வி வாரத்தை முன்னிட்டு நல்லூரில் இன்று இந்து சமய அறநெறி கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றதுநல்லூர் பிரதேச செயலக இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் இடம்பெற்றதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts: