அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடுத்தப்படும் பேரந்துகளுக்கு தண்டப் பணம் அதிகரிப்பு!
Thursday, November 24th, 2016
அங்கீகரிக்கப்பட்ட பயணிகள் சேவைக்கான அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளுக்கான ஆகக்குறைந்த தண்டப் பணமான 10 ஆயிரம் ரூபாவை 2 லட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஜந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செயதியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான கஜந்த கருணாதிலக இதனைத்தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் பயணிகளின் நன்மைக்கருதி அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ஈடுபடுபஸ்களை செலுத்துவோருக்கு எதிராக தற்போது காணப்படும் சட்டத்தினை மேலும் வலுவூட்ட வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில் இவ்வாறு பஸ்களை செலுத்துவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மூலம் வெளியிடப்பட்ட அனுமதிக்கப்பட்ட பயணிகள் சேவை அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்துகளை செலுத்துவோருக்கு எதிராக அது தொடர்பில் விதிமுறைகளை தயாரித்து 1991ம் ஆண்டு 37ம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் 40 உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விவானசேவைகள் அமைச்சா நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது என்று மேலும் தெரிவித்தார்.

Related posts:
|
|
|


