அதிபர் நியமனங்களை உடன் நிறுத்தி வையுங்கள்!
 Wednesday, October 12th, 2016
        
                    Wednesday, October 12th, 2016
            
நடுவண் கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வந்ததன் பின், அனைவருக்கும் ஒரே தடவையில் பாடசாலையை நிலைப்படுத்துங்கள். தற்போது கொடுக்கப்பட்டுள்ள புதிய அதிபர்களின் நியமனங்களை உடனடியாக இரத்து செய்யுங்கள். இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் வழங்கப்படாத புதிய அதிபர்கள் வலியுறுத்தினர்.
அதிபர் நியமனம் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக கலந்துரையாடல் யாழ்.மத்திய கல்லூரியில் நேற்றுமுன்தினம் முற்பகல் நடைபெற்றது. நியமனம் வழங்கப்படாத புதிய அதிபர்களுக்கும் மகாணக்கல்வி அமைச்சின் செயலாளர் மாகாணக் கல்வி பணிப்பாளர் ஆகியோர் அதில் கலந்து கொண்டிருந்தனர். வழங்கப்பட்ட அதிபர்களின் நியமனங்களை இரத்து செய்ய முடியாது.
உங்களுக்கும் அதே திகதியில் (எங்களுக்கும்) நியமனம் வழங்கலாம் என்று கூறினார்கள். நியமனத் திகதி எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால் பாடசாலைகளில் நிலைப்படுத்துவதுதான் எங்களுக்கு இருக்கும் பிரச்சினை, இதனால் நாங்கள் பல பிரச்சினைகளை எதிர்காலத்தில் சந்திக்கவேண்டி வரும். எங்கள் கோரிக்கைகளை புரியாத மாதிரி நடிக்கிறார்கள்.
எல்லோரும் அதிபர் பதவியைக் கேட்டால் வெளிமாவட்டத்திற்கு போகவேண்டி வருமென மிரட்டுகிறார்கள். நடுவன் கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வந்ததன் பின்னர் அனைவருக்கும் ஒரே தடவையில் பாடசாலையை நிலைப்படுத்துங்கள்.தற்போது கொடுக்கப்பட்டுள்ள புதிய அதிபர்களின் நியமனங்கனை உடனடியாக இரத்துச் செய்யுங்கள். அதனைத்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம். என்று பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் வழங்கப்படாத புதிய அதிபர்கள் தெரிவித்தனர்.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        