அதிபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Wednesday, June 27th, 2018

தென்மராட்சிக் கல்வி வலயத்தில் கடமையாற்றி இலங்கை கல்வியியலாளர் சேவைக்குள் உள்வாங்கப்பட்ட இரு அதிபர்களின் இடங்களுக்கு புதிய அதிபர்களை நியமிப்பதற்கு கல்வி வலயத்தினால் வலயப் பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வகை 11 பாடசாலைக்கு இலங்கை அதிபர் சேவை தரம் 11 ஐச் சேர்ந்த அதிபர்களும் அதற்கு மேற்பட்ட தரத்தையுடைய அதிபர்களும் வகை 111 பாடசாலைக்கு அதிபர் சேவை தரம் 111 ஐச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

இலங்கை அதிபர் சேவையில் தற்போது கடமையாற்றும் பாடசாலையில் தொடர்ச்சியாக 3 வருடங்கள் சேவையாற்றி புதிய நியமனத்தின் பின்னர் தொடர்ச்சியாக 3 வருடங்கள் கடமையாற்றக்கூடிய வயதெல்லையைக் கொண்டவர்களை விண்ணப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வகை 11 பாடசாலைக்கு அதிபர் சேவை தரம் 11 ஐச் சேர்ந்தவர்களின் விண்ணப்பிக்காத சந்தர்ப்பத்தில் தரம் 111 அதிபர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை வலய நிர்வாக அலகில் பெற்று பூர்த்தி செய்து ஜுலை 10 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வலயக் கல்வி பணிப்பாளர் சு.சுந்தரசிவம் அறிவித்துள்ளார்.

இதேவேளை வகை 1 சீ தரத்தையுடைய கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலய அதிபர் செ.பேரின்பநாதன் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு அதிபர் பதவி வெற்றிடமாக உள்ளதெனவும் இதற்கான விண்ணப்பம் மாகாண கல்வித் திணைக்களத்தினால் கோரப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: