அதிகரித்த வேகத்தால் பறிபோனது 23 வயது இளைஞர் உயிர்!
Sunday, February 19th, 2017
பருத்தித்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் நகரைசேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில், யாழ் நகரை சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பகல் 3 மணியளவில் பருத்தித்துறை வீதி, குஞ்சர் கடைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இளைஞர் வந்த மோட்டார் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
அத்துடன் குறித்த விபத்துக்கு அதி வேகமே கரணம் என்றும், உழவு இயந்திர சாரதி படு காயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
|
|
|


