அடைமழையால் முற்றாக முடங்கியது கொழும்பு – போக்குவரத்து நெரிசலால் மக்கள் திண்டாட்டம்!
Monday, July 20th, 2020
கொழும்பில் பெய்து வரும் அடைமழை காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கிருலப்பனை, பேஸ்லைன் சந்தி வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஹைலெவல் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலையில் இருந்து அடைமழை பெய்து வரும் நிலையில் கொழும்பின் பல்வேறு வீதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பின் அனைத்து பிரதான வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சீரற்ற காலநிலை இன்று இரவுவரை நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் மாணவர்களுக்கு நிவாரணம்!
இலங்கையின் அவசர வேண்டுகோள் - 40,000 தொன் டீசலை வழங்குகின்றது இந்தியா!
ரஜனி திரணகமவின் முறிந்த பனைகள் என்னை திரும்பி பார்க்கவைத்தது – பனைசார் அபிவிருத்தி கட்டடத் திறப்பு வ...
|
|
|


